யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) NRI-க்கள் உட்பட, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்ற 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணை வழங்குகிறது.
ஆதார் லெட்டர், ஆதார் PVC அட்டை, இ-ஆதார் மற்றும் எம்-ஆதார் போன்ற பல்வேறு விதமான வடிவங்களில் ஆதார் அட்டை கிடைக்கிறது.
ஆதார் PVC அட்டை
ஆதார் PVC அட்டை என்பது தனி நபர்கள் தங்களுடைய வாலட்டுகளில் வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய வடிவிலான ஆதார் அட்டை ஆகும். ஆதார் PVC அட்டையில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்ட QR கோடு மற்றும் புகைப்படம் போன்றவை ஆஃப்லைன் வெரிஃபிகேஷன் செயல்முறைக்கு தகுந்தபடி கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆதார் PVC அட்டையை பெறுவது எப்படி?
தனி நபர்கள் ஆதார் PVC அட்டையை பெறுவதற்கு அதிகாரப்பூர்வ UIDAI வெப்சைட்டுக்கு செல்லலாம் அல்லது நேரடியாக ஆதார் சேவை மையத்தை அணுகியோ அல்லது எம்-ஆதார் அப்ளிகேஷன் மூலமாகவோ பெறலாம். இதற்கு ஒருவர் தங்களுடைய ஆதார் நம்பர் அல்லது வெர்ச்சுவல் ID (VID) போன்றவற்றை வழங்கி இந்த சேவைக்கான சிறிய தொகையை செலுத்த வேண்டும்.
கூடுதலாக பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் அல்லது இமெயில் போன்றவற்றை கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் உங்களது கோரிக்கையை நிறைவு செய்வதற்கு மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடிக்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) அனுப்பி வைக்கப்படும்.
நீங்கள் ஆர்டர் செய்தவுடன் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு 5 முதல் 7 வேலை நாட்களுக்குள் கார்டு விநியோகிக்கப்படும். PVC ஆதார் அட்டையில் தனிநபரின் ஆதார் நம்பர், புகைப்படம் மற்றும் இருப்பிட தகவல் இடம்பெற்றிருக்கும். கூடுதலாக வெரிஃபிகேஷன் செயல்முறையை எளிதாக்குவதற்கு இந்த அட்டையில் QR கோடு கொடுக்கப்பட்டிருக்கும்.
PVC ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
உங்களுடைய போனில் எம்-ஆதார் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும்.
உங்கள் ஆதார் எண் மற்றும் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்ட OTP பயன்படுத்தி லாகின் செய்யவும்.
லாகின் செய்தவுடன் 'Order PVC Aadhaar Card' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
ஆர்டர் பக்கத்தில் கவனமாக உங்களுடைய பதிவு செய்யப்பட்ட பெயர் மற்றும் முகவரி விவரங்களை ஆய்வு செய்யவும்.
PVC அட்டையை ஆர்டர் செய்வதற்கான கட்டணம் 50 ரூபாய் என்று ஸ்கிரீனில் திரையிடப்பட்டிருக்கும்.
டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு, UPI போன்ற பேமெண்ட் ஆப்ஷன்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யவும்.
பேமெண்ட் செயல்முறையை நிறைவு செய்ய ஸ்கிரீனில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
பேமெண்ட் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதும் உங்களுடைய விண்ணப்ப நிலையை கண்காணிப்பதற்கு ஒரு சேவை கோரிக்கை எண் (SRN) மெசேஜ் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
No comments:
Post a Comment