ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள்.
குறிப்பாக விடுமுறை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக தற்போது திருப்பதி தேவஸ்தானம் அரை மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அரை மணி நேரத்தில் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம். அவர்களுக்காக தினசரி சிறப்பு ஸ்லாடை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இதை பயன்படுத்தி வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு அவர்கள் சாமி தரிசனம் செய்யலாம். அதோடு கூடுதல் சிறப்பாக பார்க்கிங் ஏரியாவில் இருந்து கோவிலின் வாயிலில் இருக்கும் கவுண்டர் வரை ஒரு மின்சார கார் சிறப்பு ஸ்லாட்டின் போது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக நிறுத்தப்படும்.
மேலும் இவர்கள் வெறும் ரூ.20 மட்டும் செலுத்தி இரண்டு லட்டுகளையும் எடுத்து செல்லலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கிடைப்பதோடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சிறப்பு சலுகையை பெற கட்டாயமாக ஆதார் அட்டை மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் அதற்கான அட்டையை கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment