Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 28, 2024

அரை ஏக்கர் இருந்தால் போதும்..!விவசாயிகளுக்கு ரூ.3000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3000/- மானியமாக வழங்கப்படவுள்ளது.

கால்நடைகளுக்கு தீவனப்பயிர் பற்றாக்குறையை போக்கும் பொருட்டு, கால்நடை தீவனப்பயிர்களை தென்னை/பழத்தோட்டங்களுக்கு இடையில் ஊடுபயிராக சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 75 ஏக்கர் பரப்பளவில் தீவனப்பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்திட கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3000/- மானியமாக வழங்கப்படவுள்ளது.

ஒரு பயனாளிக்கு குறைந்தபட்சம் 0.5 ஏக்கர் அதிக பட்சம் 2.5 ஏக்கர் நிலப்பரப்பு வரை ஊடுபயிராக தீவனப்பயிர்கள் பயிரிட மானியம் வழங்கப்படும்.

மேற்படி திட்டத்தில் பல்லாண்டு தீவனப் பயிர்கள், தானிய வகை தீவனப்பயிரிகள், தீவனப்புல் வகைகள் பயிரிட விரும்பும் விவசாயிகள் சாகுபடிக்கான மானியத்தொகை பெற தகுதியுடையவர்கள். தோட்டத்தில் தீவனப்பயிரை ஊடுபயிராக விதைத்த பிறகு கிராம நிருவாக அலுவலரிடம் பயிர் விதைப்பு சான்றிதழ் (அடங்கல்) மற்றும் இடு பொருட்களான விதைகள், நிலம் பண்படுத்த மேற்கொண்டமைக்கான செலவின இரசீதுகள் ஆகியவற்றை மானியம் பெற்றிடும் பொருட்டு சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட திட்டத்தில் கால்நடை வளர்ப்போர் சிறு குறு விவசாயிகள், எஸ்சி/ எஸ்டி மற்றும் பெண் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இறவையில் தீவன சாகுபடி செய்திட விருப்பமுள்ள விவசாயிகள் பாசன வசதியுள்ள 0.5 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் நிலம் வைத்திருக்க வேண்டும். இத்திட்டத்தினை 3 வருடம் தொடர்ந்து செய்திடல் வேண்டும். இத்திட்டத்தில் இனம்வாரியாக 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடியின் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். ஏற்கனவே, கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற்றவர்கள் மீண்டும் பயன்பெற இயலாது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News