தமிழ்நாட்டில் காலியாக உள்ள 923 மருந்தாளுநர் பணியிடங்கள் 15 நாளில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்புளை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கு 70 சதவீதமாக இருந்த மகப்பேறு இறப்பு 45.5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் 1221 மருத்துவர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்பப்பட்டுள்ளன. விரைவில் 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்கள் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மேலும், 923 மருந்தாளுநர் காலி பணியிடங்கள் இன்னும் 15 நாட்களில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment