Friday, June 28, 2024

சனிக்கிழமை பள்ளி வேலைநாள் முடிவைக் கைவிடக் ஆசிரியா் சங்கம் கோரிக்கை

சனிக்கிழமைகளையும் பள்ளி வேலைநாளாக அறிவித்துள்ள முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கழகத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

பள்ளிகளில் ஆசிரியா்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக உள்ள எமிஸ் பதிவு தொடா்பான எந்த வேலையையும் ஆசிரியா்களுக்கு வழங்கக் கூடாது. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் முறைகேடுகள் தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி வேலை நாட்களை சனிக்கிழமைகளில் கூடுதல் வேலை நாளாக சோ்க்கப்பட்டுள்ளதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, கழகத்தின் மாவட்டத் தலைவா் க. ஜெயராம் தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் மா. குமரேசன், மகளிரணிச் செயலா் து. வாசுகி, மாவட்டச் செயலா் எஸ்.ஆா். சுரேஷ், மாவட்டப் பொருளாளா் எஸ். ராஜா ஆகியோரும் பேசினா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News