Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் கணவனும்,மனைவியும் தனித் தனியாக பிரிந்து வாழும் நிலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கணவருடன் சேர்ந்து வாழும்பொழுது தங்கள் பொருளாதார தேவைகள் அனைத்திற்கும் கணவரையே சார்ந்து இருப்பது கஷ்டமாக உள்ளதாக ஒரு சில பெண்கள் கூறுகின்றனர்.அதனால் பல பெண்கள் வேலைக்கு சென்று தங்களது நிதி வசதியை மேம்படுத்தி கொள்கின்றனர். இதன் காரணமாக வீட்டில் குழந்தையை யார் கவனிப்பது?
என்ற போட்டி ஏற்படுவதால் கணவன்,மனைவிக்குள் நிறைய சண்டைகள் ஏற்பட்டு இருவரும் பிரியும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் எனத் தெரிகிறது.
அதிலும் ஒரு சிலர் விவாகரத்து பெறாமலே வாழ்ந்து வருகின்றனர்.சட்டப் பூர்வமாக பிரியாமல் இருப்பதால், அவர்களின் பெயர்கள் ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளில் சேர்ந்தே உள்ளது.இந்த நிலையில் 2021ம் ஆண்டு விவாகரத்து பெறாமல் கணவரை பிரிந்து வாழும் பெண்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்தது. இதற்கு அவர்கள் எந்த ஒரு ஆவணமும் அளிக்க தேவையில்லை எனவும்,மேலும் சம்பந்தபட்ட பெண்ணின் முகவரிக்கு அரசு தணிக்கை அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து அறிக்கை கொடுத்தால் மட்டும் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுயிருந்தது.
இதனால் பெண்கள் எவ்வித சிரமுமின்றி எளிதில் ரேஷன் கார்டு வாங்க முடிந்தது.அந்த வகையில் தற்போது கணவர்களுக்கும் ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் தற்போது நடந்து வரும் சட்ட சபை கூட்டத்தொடரில் இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் மனைவியை பிரிந்து தனியாக வாழும் ஆண்களுக்கும் புதிதாக குடும்ப அட்டை தரப்பட வேண்டுமென கூறினார்.அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு அவ்வாறு வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.அதாவது சட்டப்படி பிரிந்தால் மட்டுமே கணவர்களுக்கு தனி ரேஷன் கார்டு தர முடியும் என அரசு தெரிவித்துள்ளகதாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment