தைராய்டு சுரப்பி என்பது நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை சரியான படி செயல்பட உதவி செய்கிறது. ஆனால் நம் உடலில் ஏற்படும் அயோடின் குறைபாடு காரணத்தால் தைராய்டு சுரப்பி குறைந்த அளவே சுரக்கும், இதனால் ஹார்மோன் குறைபாடு ஏற்படுகிறது.
தேவையற்ற உணவு பழக்கம், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருத்தல், தூக்கமின்மை இது போன்ற பல காரணத்தினால் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் பிறக்கும் குழந்தை ஏதாவது ஒரு குறைபாட்டுடன் பிறப்பதற்கான வாய்ப்பு இருக்கும். சமீப காலமாக ஆண், பெண் என இரு பாலருக்குமே தைராய்டு பிரச்சினை இருந்து வருகிறது.
இதை குணப்படுத்துவதற்கு சில உணவுப் பொருட்களை மேற்கொள்வது சிறந்தது. எந்த உணவு வகைகள் தைராய்டு பிரச்சினையை குணம் செய்யும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் பொதுவாகவே பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. அந்த வகையில் தைராய்டுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது தினமும் காலையில் வெறும் வயிற்றில் 200 மில்லி நெல்லிக்காய் சாறு பருகி வருவதன் மூலம் தைராய்டு பிரச்சனையில் இருந்து குணமடையலாம். மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
தேங்காய் பூ: தேங்காய்ப்பூவின் மருத்துவ குணங்கள் பல பேருக்கு தெரிவதில்லை ஆனால் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு தேங்காய் பூ ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். தினமும் தேங்காய் பூவை சாப்பிட்டு வருவதன் மூலம் தைராய்டு சுரப்பி குறைபாடு விரைவில் குணமடையும்.
No comments:
Post a Comment