மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக ந்மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.
மணத்தக்காளி கீரையானது சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மணத்தக்காளி கீரையானது இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது மணத்தக்காளி. மணத்தக்காளியின் வேரானது மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மணத்தக்காளி வற்றலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும்.
மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது நல்லது.
இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும்.
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.
மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண்,குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.
நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்.
சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.
மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.
No comments:
Post a Comment