Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 4, 2024

பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு மூலம் நேரடி பணம்..!


பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இன்றி படிக்கும் வண்ணம் உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறது தமிழக அரசு. இது மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வங்கி கணக்கு மூலம் செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதற்காக ஒவ்வொரு மாணவரின் வங்கி கணக்கு விவரங்களை பெற வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், அனைத்து பள்ளிகளிலும் வங்கி கணக்கை தொடங்கி மாணவர்களுக்கு மிகவும் எளிதாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதையொட்டி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பள்ளிக் கல்வித்துறை வகுத்துள்ளது.

அதன்படி, 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் தேவை. இவர்களுக்கு கணக்கு தொடங்கும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயர் இணைக் கணக்காக தொடங்கப்படும். இதனை இருவரும் இணைந்து பராமரிக்க முடியும். ஜீரோ பேலன்ஸ் கணக்காக தொடங்கப்படும். ஏற்கனவே ஆதார் அட்டை எடுத்திருந்தால் 5 வயது பூர்த்தியானதும் பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

10 வயதுக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்க ஆதார் அட்டை, மாணவனின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவை தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் விவரங்கள், தொலைபேசி எண் ஆகியவையும் வேண்டும்.

இதுதொடர்பான படிவத்தில் உரிய விவரங்களை நிரப்பி பள்ளிக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளின் விவரங்களை இணைக்க வேண்டும். குறிப்பாக வங்கி கணக்குகளின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News