முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நாளை மறுதினம் நடக்கிறது. உபரியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்துக்குள் உள்ள காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு வருகிற 20ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இந்த கலந்தாய்வில் தவறாது கலந்துகொள்ள ஏதுவாக உபரி என்று கண்டறியப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே கலந்தாய்வு நடைபெறும் நாள், இடம், நேரம் தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த கலந்தாய்வை எந்தவித புகாருக்கும் இடம் இல்லாத வகையில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment