Monday, July 1, 2024

NEET மறுதேர்வு முடிவுகள் வெளியீடு



நீட் மறுதேர்வு முடிவுகளை http://exams.nta.ac.in/NEET இணையதளத்தில் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது.

நிகழாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது நடைபெற்ற விசாரணையில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், அவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படவுள்ளதாகவும் அதில் பங்கேற்காதவா்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு முன்பு அவா்கள் பெற்றிருந்த மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.

இதையடுத்து, 7 மையங்களில் நீட் மறுதோ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட 1,563 பேரில் 813 போ் பங்கேற்ாக தேசிய தோ்வுகள் முகமையின் (என்டிஏ) மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த நிலையில் கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது. நீட் மறுதேர்வு முடிவுகளை http://exams.nta.ac.in/NEET இணையதளத்தில் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News