பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தை எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம். இந்த திட்டத்தில் என்னென்ன பயிர்களை விளைவிக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.
விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இதனால் பல்வேறு விவசாயிகள் பலனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படி ஒரு மானிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவது பலருக்குத் தெரிவதில்லை. இந்த திட்டம் குறித்து இங்கு பார்ப்போம். தமிழக அரசின் தோட்டக் கலைத் துறை சார்பில் பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், சுரைக்காய், அவரைக்காய் போன்ற கொடி காய்கறிகளை பந்தல் போட்டு சாகுபடி செய்யலாம்.
இதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்த பந்தல் அமைக்க மானியம் வழங்கி வருகிறது. இந்த சாகுபடிக்கு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தை பெற விரும்பும் விவசாயிகளுக்கு ரூ. 80 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடைய வேண்டும் என்றால் விவசாயிகள் சிட்டா, அடங்கல், வரைப்படம், விஏஓ சான்று, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் ஆகிய சான்றுகளின் அசல், நகல்களுடன் தோட்டக் கலைத் துறை அலுவலகத்திற்கு சென்று மானியம் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment