இந்தியாவில் சிம் கார்டு பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்திய அரசு அமைப்பான டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஒரு புதிய விதியை அமல்படுத்த உள்ளது. இது நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றது. இந்த புதிய விதி அமல்படுத்திய பிறகு தேவையற்ற கால்கள் பிரச்சனையை பெரும் அளவுக்கு நீக்க முடியும். இதற்காக டெலிகா நிறுவனங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
போலி மற்றும் ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய விதி அமல்படுத்த உள்ளது. தனிப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மார்க்கெட்டிங் மற்றும் ப்ரமோஷன் அழைப்புகள் வந்தால் அந்த நம்பரை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்ய தொலைதொடர்பு வழக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளுக்கு இணைப்புகளை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களையும் தடை செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
No comments:
Post a Comment