தமிழகத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆண்டு அட்டவணையில் செப்டம்பர் 28 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment