Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 28, 2024

2 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது.. குவியும் பாராட்டு! போன் போட்ட அமைச்சர் மகேஷ்!


தமிழகத்தின் இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத்துக்கும், மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரனுக்கும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியவர். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

தேசிய நல்லாசிரியர் விருதுக்காக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து, ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து 50 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அந்தவகையில், தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்க உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் நிலையில், அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேசிய நல்லாசிரியர் விருதுபெறும் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத் மற்றும் முரளிதரனுக்கு, சமூக வலைதளம் மூலமும், செல்போனில் தொடர்புகொண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment