தினமும் மதிய உணவுக்கு முன்னர் 3 பூண்டு பற்களை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் 9 நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
பூண்டு
பூண்டு அதன் தனித்தன்மையான கார சுவை மற்றும் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. தினமும் மதிய உணவுக்கு முன்னர் 3 பூண்டு பற்களை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. அது உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்கிறது. அது என்ன நன்மைகளை உங்கள் உடலுக்கு செய்கிறது என்று பாருங்கள்.
இதய நோய் ஆபத்தை குறைக்கிறது
இதயத்துக்கு இதமானதாக பூண்டு அறியப்படுகிறது. இதை உங்கள் அன்றாட உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொள்வதால், அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. பூண்டில் உள்ள சல்ஃபர் என்ற உட்பொருள், உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கொழுப்பு அளவைக் குறைக்கிறது. உங்கள் இதயத்தை வலுவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் ஃப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இந்த ஃப்ரீ ராடிக்கல்கள்தான் உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் வளர உதவுகிறது. எனவே உங்கள் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ளும்போது, அது புற்றுநோயை தடுக்கிறது.
பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள்
பூண்டு, இயற்கை நோய் எதிர்க்கும் ஒன்று. இதில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், பல்வேறு தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது. உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. பூண்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு சளி, இருமல் போன்ற தொற்றுக்களை குணப்படுத்துகிறது.
மூட்டுவலியைப் போக்குகிறது
ஆர்த்ரிட்டிஸ் பிரச்னைகளால் நீங்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தீர்கள் என்றால், அதை பூண்டு தடுக்கிறது. ஆர்த்ரிட்டிஸ்க்கு பூண்டுதான் இயற்கை நிவாரணி. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வலியைக் குறைக்க உதவுகிறது. உடல்லி ஆர்த்ரிட்ஸ் நோயால் ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்குகிறது. உங்கள் உணவில் பூண்டை நீங்கள் சேர்த்துக்கொள்ளும்போது, அது சிறந்த மூட்டு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உங்களின் மூட்டுகளை வலுவாக்குகிறது.
செரிமானம்
உடலிக் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உங்கள் உடலில் செரிமான எண்சைம்களை தூண்டுவிடுகிறது. அதன் மூலம் உங்கள் உடலில் செரிமானத்தை அதிகரிக்கிறது. உங்கள் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது
பூண்டில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உங்கள் உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கொடுக்கிறது. எனவே தினமும் மதிய உணவுக்கு முன் பூண்டு சாப்பிடுவது உங்கள் உடல் நோய் மற்றும் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்
பூண்டு உங்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. எலும்பை வலுப்படுத்துகிறது. எலும்பு தொடர்பான பிரச்னைகள் மற்றும் எலும்புபுரை நோயைத் தடுக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
பூண்டு, உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. பசியைக் குறைக்கிறது. ரத்தச் சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இதனால் நீங்கள் சிறப்பாக உடல் எடையை குறைக்க முடிகிறது.
ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமம்
பூண்டு உங்கள் உடலின் உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியத்தை மட்டும் பேணிக்காப்பது கிடையாது. உங்கள் சருமத்தையும் காக்கிறது. இதன் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், உங்கள் சருமத்தை தொற்றுகளிடம் இருந்து காக்கிறது. சருமத்தை பளபளப்பாக்குகிறது. உங்கள் சருமம் ஆரோக்கியமாக மிளிர உதவுகிறது.
No comments:
Post a Comment