Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 27, 2024

பொறியியல் கலந்தாய்வு: 63,843 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடந்து வருகிறது. 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 23-ம்தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க பொதுப் பிரிவின்கீழ் 93,059 பேர் தகுதி பெற்றனர்.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்களில் பொதுப் பிரிவில் 58,889 பேர், 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4,954 பேர் என மொத்தம் 63,843 பேருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதை உறுதிசெய்ய அவர்களுக்கு இன்று மாலை 5.30மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு 28-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர்சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment