தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளிடையே கலைத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு கலைத் திருவிழா நடைபெற இருக்கிறது.
இந்த விழாவின்போது பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பரதம் உள்ளிட்ட பலவிதமான போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகள் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் நிலையில் வெற்றி பெற்றவர்களின் விவரம் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்தி மாணவ மாணவிகள் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தலாம்.
No comments:
Post a Comment