இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள் உதவும். இந்நிலையில் கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்ட சில பழங்களை அறிந்து கொள்ளலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க சாப்பிட வேண்டிய சில பழங்கள்
பப்பாளி
நன்றாக பழுத்த பப்பாளி சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் கூடியது. வைட்டமின் டி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பப்பாளில் கொலஸ்ட்ராலை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனைக்கும் அருமருந்தாக உள்ளது. பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை கூர்மைபடுத்துகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதய துடிப்பை சீராக்கும் திறன் பெற்ற இதனை உட்கொள்வது உடல் நலத்திற்கு சிறந்தது. ஏழைகளுக்கான சிறந்த பழமான வாழைப்பழம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். வாழைப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்
ஆப்பிள்
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த தினமும் ஆப்பிள்களை சாப்பிடுவது பலன் தரும். ஆப்பிள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருப்பதோடு மட்டுமின்றி, குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆப்பிள் சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
எலுமிச்சை
எலுமிச்சையில், வைட்டமின் சி மட்டுமல்லாது இயற்கையாகவே அதிக கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் வைட்டமின் டியும் நல்ல அளவில் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இப்பழத்தை எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தியும் சிறப்பாக இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரி
நரம்புகளில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆற்றல் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு உண்டு. ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, மலச்சிக்கலும் நீங்கும். குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்
வெண்ணெய் பழம்
வெண்ணெய் பழம் என அழைக்கப்படும் அவகெடோவில், ஒலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. அவகேடோ சாப்பிடுவதால் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். இதனை சாலட் வடிவில் சாப்பிடலாம். சாண்ட்விச்சில் பயன்படுத்தலாம்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, மேலே குறிப்பிட்டுள்ள பழங்களை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், சீரான உணவு முறையையும், உடற்பயிற்சிகளையும் பின்பற்ற வேண்டும். கொலஸ்ட்ரால் அளவு, குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாகம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகரிக்கிறது. இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் கூட இதற்கு அதிகம் இலக்காவது கவலை அளிக்கும் விஷயம்.
No comments:
Post a Comment