மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும்.வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.
களிமண் பானையில் தண்ணீர் நிரப்பிக் குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும், இதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். கோடைக்காலத்தில் பானை நீரை அருந்தினால் தேன் போன்ற இனிமையான சுவை இருக்கும். இயற்கையாகவே பானைகளில் உள்ள நீர் குளிர்ச்சியடைகிறது. தண்ணீரின் சுவையும் அதிகரிக்கும். புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது. ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.
கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண் பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!?
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும்.
மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது.
பனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும் காற்றில் 'ஈரப்பதம்' அதிகம் கலந்து இருக்கும். காற்று
ஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும் இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு குறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.
இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை குளிர்விக்காது.
ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும் என்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும்
5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான் குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.
பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்படுவது உண்டு. மண் பானையில் வைக்கப்படும் தண்ணீர் உங்களுடைய மெட்டபாலிசம் என்று கூறப்படும் வளர்சிதை மாற்றத்தை ஆக்டிவாக வைத்திருக்கும். இயற்கையான பொருளில் எந்தவித ரசாயனமும் சேர்க்காமல் செய்யப்படும் பானையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்கும். எனவே இது உடலின் மெடபாலிக் அமைப்பை மேம்படுத்தும்.
பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் இது இயற்கையாகவே குளிர்ச்சியாக மாறுகிறது. ஃபிரிட்ஜில் வைப்பது போல டெம்பரேச்சர் குறைக்கப்பட்டு குளிர்ச்சியாக மாறுவதில்லை. எனவே ஜில்லென்று இருக்கும் பானைத் தண்ணீர் உடலுக்கு எந்த கேடும் விளைவிக்காது. அது மட்டுமின்றி பானைத் தண்ணீர் குடிப்பதால் சளி பிடிக்கும், காய்ச்சல் வரும் அல்லது தொண்டை கட்டிக்கொள்ளும் என்று என்று எந்த பிரச்சனைகளும் உண்டாகாது.
பண்டைய காலங்களில், அதிகமாக கோடை காலத்தில் தான் பானை பரவலாக பயன்படுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் வெப்பம் மற்றும் சூரியனின் ஒளிக்கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்வது தான். எனவே சூரியனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சன் ஸ்ட்ரோக் ஆகியவற்றிலிருந்து தடுக்க உதவும்.
சாதாரணமாக பாத்திரங்களில் வைத்து குடிக்கும் தண்ணீரை விட மண்பானையில் குடிக்கும் தண்ணீருக்கு உடலை குணப்படுத்தும் சக்தி அதிகம். பானையை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களில் இயற்கையான கனிமங்கள் நிறைந்துள்ளது. எப்படி செம்புப் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் வைத்து குடிப்பது நச்சுக்களை நீக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறதோ, அதேபோல பானையில் வைக்கப்படும் தண்ணீரும் உடலில் இருக்கும் ஆல்கலைன் அளவை சரிசெய்து அசிடிட்டியை குறைக்கிறது.
பானை தண்ணீர் தொடர்ந்து குடித்து வரும்போது வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகள் மற்றும் அசிடிட்டி நீங்கி செரிமானம் மேம்படும்.
மண் பானையில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு குளிர்ச்சியாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த தண்ணீரால் வாயு பிரச்சனையும் நீங்கும். இது தவிர, இந்த நீர் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கிறது. மண் பானையில் தண்ணீர் வைத்தால் பல நோய்கள் குணமாகும் என்பது உண்மைதான். குறிப்பாக இந்த தண்ணீரை குடித்தால் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இந்த மண் பானை தண்ணீரை குடித்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் குணமாகி, முகம் பொலிவாக மாறும். இது தவிர, இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமாகும். பானையை காய்ந்து போக விடாமல் பானையைச் சுற்றி தண்ணீரைத் தெளித்துக்கொண்டே இருங்கள். அல்லது ஏதேனும் துணியை எடுத்து பானையை சுற்றி வைத்து பயன்படுத்துங்கள்
No comments:
Post a Comment