உயர் கல்வித்தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை பெற உரிமை உண்டு' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தென் மாவட்டங்களிலுள்ள சில அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பி.எட்., மற்றும் பிற முதுகலை பட்டப்படிப்பு முடித்து உயர் தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவை, நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.மனுதாரர்கள் தரப்பு:
ஊக்கத்தொகை வழங்குவதற்கான விதிமுறைகளை மாற்றி, மனுதாரர்களின் உரிமையை மனித வளத்துறை பறித்து உள்ளது.
அரசு தரப்பு:
இது தொடர்பான மற்றொரு வழக்கில், 2023ல் வெளியான அரசாணையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: 2020 மார்ச் 10க்கு முன் உயர் கல்வித் தகுதியைப் பெற்ற மற்றும் ஊக்கத்தொகை கோரி விண்ணப்பித்து, நிலுவையிலுள்ள ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை பெற உரிமை உண்டு. 2020 மார்ச் 10க்கு முன், உயர் கல்வித் தகுதியைப் பெற்ற மற்றும் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க உரிமை உண்டு.
கடந்த 2020 மார்ச் 10 அல்லது அதற்கு பின் உயர் கல்வித் தகுதியைப் பெறும் ஊழியர்களுக்கு ஒரே தவணையாக வழங்க, கொள்கை முடிவு அடிப்படையில் 2023ல் வெளியிட்ட அரசாணை உறுதி செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment