ஒவ்வொரு வட்டார அளவிலும் , உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கேற்பவும் , பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கேற்பவும் , பயிற்சி நாள்களை உறுதி செய்தும் , பயிற்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஒருங்கிணைந்து , ஆசிரியர்களது பணி பாதிக்காத வண்ணம் தெரிவு செய்து , 17.08.2024 முதல் 09.11.2024 முடிய , வேலை நாள்களாக கருதப்படும் சனிக்கிழமைகளில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் ஏதேனும் ஒரு தேதி வாரியாக பணிவிடுவிப்பு செய்து அனுப்பி நாளில் ( கணினியின் எண்ணிக்கைக்கேற்ப ) வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காணொலியில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக நேரடி அனுபவ வாயிலான கற்றல் அணுகுமுறையின் மூலம் இக்குறுவள மையப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
17.8.24 முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வட்டார அளவில் நடத்திடுதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்..
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
No comments:
Post a Comment