Tuesday, September 10, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2024

ஐவகை நிலங்கள்


 




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: நட்பு

குறள் எண்:781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

பொருள்: நட்பைப் போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?

பழமொழி :

An old man's sayings are seldom untrue.

மூத்தோர் சொல் பொய்ப்பது அரிது.

இரண்டொழுக்க பண்புகள் :  

 1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர், நீ இறக்கும் போது உன்னோடு தான் இருக்கும் . அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு"----ஹிட்லர்

பொது அறிவு : 

1. சோழ நாடு உள்ளடக்கிய முதன்மை பகுதிகள் எவை?

விடை: திருச்சி, தஞ்சாவூர் 

2. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?

விடை: 5

English words & meanings :

shame-அவமானம்,,

envy-பொறாமை 

வேளாண்மையும் வாழ்வும் : 

இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

நீதிக்கதை

 திருடர்களை ஏற்றமிறைக்க வைத்த தெனாலிராமன்

தெனாலிராமனின் வீட்டைச் சுற்றியிருந்த ஒரு பெரிய தோட்டம் கோடை காலத்தில் வறட்சி கண்டிருந்தது. தோட்டத்திலிருந்த ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது தெனாலிராமனுக்குச் சிரமமாகவும், அதிக செலவை உண்டாக்கக் கூடியதாகவும் தோன்றியது. 

 நள்ளிரவு  ஆறு திருடர்கள் தெனாலி ராமனின் வீட்டில் திருடுவதற்காக கொல்லைப்புற தோட்டத்தில் மறைந்திருந்தார்கள். அதைத் தெனாலிராமன் ஜாடையாகக் கண்டதும்,அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீட்டின் உள்ளே போனார்.

தன் மனைவியிடம் “ இந்தப் பஞ்சகாலத்தில் திருடர்கள் நம் வீட்டில் புகுந்து திருட வருவார்கள் ஆதலால் நம் வீட்டிலுள்ள பொன் பொருளையெல்லாம் பழைய பெட்டிகளில் வைத்து நம் தோட்டத்திலுள்ள ஆழமான கிணற்றில் போட்டு வைத்தால் பத்திரமாயிருக்கும்” என்று திருடர்களின் காதில் விழும்படி உரத்த குரலில் கூறிவிட்டு, பெட்டிகளில் கல்லையும் மண்ணையும் அள்ளிப்போட்டு மனைவியும் தானும் சிறு மகனுமாக அப்பெட்டிகளைத் தூக்கிச்சென்று கிணற்றுக்குள் தொப்பென்று போட்டான்.

அவன் வீட்டினுள் போனதும் திருடர்கள் ஆனந்தப்பட்டு பெட்டிகளை எடுப்பதற்காக கிணற்றிலுள்ள ஏற்றத்தில் பொழுது விடியும் வரை தண்ணீரை இறைத்து வெளியே விட்டுக் கொண்டிருந்தார்கள்.

தெனாலிராமன் தந்திரமாகத் தோட்டத்திற்குள் சிறு மண்வெட்டியுடன் ஓசைப்படாமல் வந்து திருடர்கள் இறைக்கும் தண்ணீரையெல்லாம் தோட்டத்திலுள்ள மரங்களுக்குப் பாத்திகளில் செல்லும்படி வெட்டிவிட்டான்.

பொழுது விடிந்து மக்கள் நடமாட்டம் தொடங்கும் நேரத்தில் தெனாலி ராமன் திடீரென்று, “ஐயா! நல்லவர்களே நீங்கள் தண்ணீயிறைத்தது போதும்! மரங்களுக்கெல்லாம் தண்ணீர் பாய்ந்து விட்டது!  பொழுது விடியப் போகிறது 

ஆகையால் பத்திரமாகப்  வீட்டுக்குச் போய்ச் சேருங்கள்!” என்று கூவிச் சிரித்தான். 

அதைக்கேட்ட திருடர்கள் திடுக்கிட்டு, மன்னரிடம் பிடித்து கொடுத்து விடுவாரோ என்று பயந்து ஓடிவிட்டார்கள்.

இன்றைய செய்திகள்

10.09.2024

* தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்கும் பணியை 6 மாதத்தில் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரிகள் 10 பேருக்கு தமிழகத்தில் பணி: தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு.

* சாகித்திய அகாதமி விருது பெற்ற மொழி பெயர்ப்பாளர் பேராசிரியர் கா. செல்லப்பன் மறைவு. முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் இரங்கல்.

* மத்திய அரசின் குடியிருப்பு கல்வி திட்டத்துக்கான ‘சிரஸ்தா’ நுழைவுத் தேர்வு குறித்து பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* வெள்ளம் பாதித்த பகுதிகளில் வறட்சி; வறட்சி பகுதிகளில் வெள்ளம் என பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் தலைகீழ் மாற்றம்: ஐபிஇ குளோபல் மற்றும் எஸ்ரி- இந்தியா என்ற அமைப்பு ஆய்வில் தகவல்.

* அல்ஜீரிய நாட்டின் அதிபராக டெபோன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

* மகளிர் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் இங்கிலாந்தின் பியூமண்ட்.

Today's Headlines

* The Madurai branch of the High Court has directed the Tamil Nadu government to start the construction of an old age home per district in 6 months. 

* Chief Secretary Muruganandam orders 10 IAS officers to work in Tamil Nadu 

* Sahitya Akademi award winning translator Prof. Chellappan passed away. Chief Minister Mr. M.K. Stalin gave his obituary for him. 

*  The Madurai branch of the High Court has ordered that the  'Chirastha' entrance examination for Central Govt's  residential education program should be widely advertised.

 * Drought in flood affected areas; floods in drought areas:Reversal of climate change in India as per  IPE Global and Esri- India organization's report on study.

* Debon re-elected as Algerian president. 

* India's Randhir Singh has been elected as the President of the Olympic Council of Asia. 

* Asian Champions Cup Hockey: India beat Japan and made its 2nd win.

* Women's Cricket: England's Beaumont ranks 3rd in the massive record list.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News