அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வு மாணவர்களிடையே தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான தேர்வு அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை மூலமாக அவர்களுக்கு 2 வருடங்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்.
இந்த தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்திற்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வு 10-ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும். இந்த தேர்வுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளம் முகவரியில் செப்டம்பர் 5 முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இதற்கு ரூ.50 கட்டணமாகவும் மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment