ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வரும் டிசம்பரில் நிறைவு அடைகிறது. இதையடுத்து 21 மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைவில் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதால் இது தொடர்பாக வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment