உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்க கீழ்கண்ட பாட்டி வைத்தியங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
1)பித்த கோளாறு
ஒரு துண்டு இஞ்சியை மற்றும் கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்த கோளாறு நீங்கும்.
2)கருப்பை கோளாறு
நெல்லிக்காயை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் கருப்பை கோளாறு சரியாகும்.
3)மாதவிடாய் இரத்தப்போக்கு
இலவங்கப்பட்டையை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு பிரச்சனை சரியாகும்.
4)மலச்சிக்கல்
முட்டைகோஸை பொடியாக நறுக்கி இஞ்சி,பூண்டு மற்றும் சீரகம் மிளகு சேர்த்து சூப் வைத்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.
5)பசியின்மை
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி,இலவங்கம் மற்றும் பெருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பசியின்மை நீங்கும்.
6)பல் வலி
சிறிதளவு மிளகை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.இதில் சிறிதளவு உப்பு சேர்த்து பற்களில் தடவினால் வலி நீங்கும்.
7)சர்க்கரை நோய்
100 கிராம் வெந்தயம்,100 கிராம் நாவல் கொட்டை,10 நெல்லி துண்டுகள்,ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு துண்டு சுக்கை அரைத்து பவுடராக்கவும்.தினமும் இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
8)வாந்தி
ஒரு வெற்றிலை மற்றும் இரண்டு ஏலக்காயை நீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.இந்த நீரை வடிகட்டி குடித்தால் வாந்தி நிற்கும்.
9)வெடிப்பு புண்
அரச இலையை அரைத்து மஞ்சள் கலந்து வெடிப்பு புண்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் ஆறிவிடும்.
10)சளி
துளசி இலை சாறில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி தொல்லை அகலும்.
11)ஒற்றை தலைவலி
சிறிதளவு கடுகை லேசாக வறுத்து பசும்பால் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் ஒற்றை தலைவலி சரியாகும்.
No comments:
Post a Comment