Monday, September 23, 2024

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு


டிட்டோஜேக் கூட்டமைப்பு முற்றுகை போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதன் மாநில நிர்வாகிகளை பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்

கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் வெளியிட்ட அறிவிப்பு: தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செப். 30 மற்றும் அக்.1-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதையடுத்து டிட்டோஜேக் மாநில நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று (செப். 23) காலை 9.15 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எனவே, டிட்டோஜேக் அமைப்பில் இடம் பெற்றுள்ள சங்கங்களில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News