Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 26, 2024

காலாண்டு விடுமுறை; ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை!





காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே திருத்திய விடைத் தாள்களைக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ அனைத்து அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ தனியார்‌ துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ காலாண்டுத்‌ தேர்வு நாளை (செப்.27) முடியும் நிலையில், செப்டம்பர் 28 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து 07.10.2024 (திங்கட்‌ கிழமை) அன்று திறக்கப்பட உள்ளன.

சிறப்பு வகுப்புகளுக்கு அனுமதி இல்லை

இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளைத் திறக்கும் முன்பாக, வளாகங்களைத் தூய்மைப்படுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பன்றே விடைத்தாள்

அதேபோல பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே, மாணவர்களிடம் திருத்திய விடைத் தாள்களைக் கொடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment