தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் அந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்களின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 3280
நியாய விலைக்கடை விற்பனையாளர்
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: பொதுப்பிரிவினர் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க இதர பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ரூ. 6250 நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ. 8600 - ரூ. 29000 வரை
நியாய விலைக்கடை கட்டுநர்
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பு ஊதியம் ரூ. 5,500 நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ. 7,800 - ரூ. 26000 வரை
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்களின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 7.11.2024
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு, பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு விற்பனையாளர் பதவிக்கு ரூ. 150, கட்டுநர் பதவிக்கு ரூ. 100. அதேநேரம் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
No comments:
Post a Comment