மழைக்கு நடுவே ஆசிரியர்களுக்கு பயிற்சி! ஆதிக்கம் செலுத்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்! கலெக்டர்கள் வசமாகிவிட்டதா கல்வித்துறை? முதலமைச்சருக்கு ஐபெட்டோ கடிதம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
தொடக்கக்கல்வித் துறையில் ஆய்வு மேற்கொள்ளவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், தொடக்கக்கல்வி இயக்குநர், இணையக்குநர், துணை இயக்குநர்,உதவி இயக்குநர், மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்,திட்ட இயக்குநர்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்,வட்டார வளமைய ஆசிரியர்கள் என இருக்கும்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 1,2,3ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு
(19/10/2024)ம் தேதியில் கூட்டம் நடத்துவது வித்தியாசமாக உள்ளது.
நிர்வாகத்தில் பல்வேறுபட்ட துறைகள் இருக்கும்போது, தஞ்சை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது வேதனை தருவதாக உள்ளது.கைகளைக்கட்டிவிட்டு சித்திரம் வரையச் சொன்னால் எப்படி இயலும்?கற்பித்தல் பணியை மட்டும் சுதந்திரமாக செய்யும்போது இலக்கினை எளிதில் அடையலாம் தாங்கள் நன்கறிந்த ஒன்று.எனவே தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கூட்ட நடவடிக்கையை ரத்து செய்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு துணை முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், உடனடியாக தலையிட்டு தக்க முடிவு எடுத்து ஆசிரியர் நலன் காத்து உதவிட பெரிதும் வேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள
ந.ரெங்கராஜன்
இணைபொதுச் செயலாளர்
அகில இந்திய ஆசிரியர் கூட்டணி
பொதுச் செயலாளர் உலகத் தமிழ் ஆசிரியர் பேரவை
No comments:
Post a Comment