Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 4, 2024

சுடுநீரில் மிளகு சேர்த்து ஒரு மாதம் குடித்து வந்தால்.....



பொதுவாக உடல்நிலை சரியில்லாத பொழுது நாம் மிகவும் அசௌகரியமாக உணர்கிறோம். நாம் நோயால் கஷ்டப்படுகிற பொழுது நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் மட்டுமே குறைந்து போவதில்லை.

உங்களுடைய செயல்பாடுகளின் உற்பத்தியும் குறைந்து போகிறது. அதிலும் தற்போதைய சமூக நிலையில் உடல் ஆரோக்கியத்தை முறையாகப் பராமரிப்பது என்பது மிகவும் விலையுயர்ந்த ஆடம்பரமான ஒரு விஷயமாக மாறிவிட்டது.

நம்முடைய முன்னோர்கள் நம்மைப் போல உணவை ருசிக்காகவும் அதனால் ஏற்படும் பிரச்சினைக்காக மருந்தையும் சாப்பிடவில்லை. உணவையே மருந்தாக சாப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் உணவு எடுத்துக் கொள்ளும் அளவில் மருந்தையும் மருந்து சாப்பிடுகிற அளவில் உணவையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் நம்முடைய முன்னோர்கள் வழியிலேயே நம்முடைய கிச்சனில் இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் என்னென்ன குணங்கள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அதைப் பயன்படுத்தி உங்களுடைய நோயைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகு சேர்த்து ஒரு மாசம் குடித்தால் உடலில் ஏற்படும் அதிக பிரச்சினைகளில் இருந்து விடைபெறலாம்.

மிளகில் ஆன்டி-பாக்டீரியல் அதிக அளவில் இருப்பதால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால், மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை உடலினுள் நுழையும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, உடலில் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை தடுத்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

உங்களுக்கு ஆஸ்துமா, நாள்பட்ட மூட்டு வலி போன்றவை இருந்தால், உணவில் மிளகு அதிகம் சேர்த்து வாருங்கள். ஏனெனில் மிளகில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, இப்பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.

மிளகில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான, நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் மிளகு இரத்த சுத்தப்படுத்தி, உடலில் இருக்கும் ப்ரீ-ராடிக்கல்களை வெளியேற்றிவிடும்.

உங்களுக்கு வயிறு சரியில்லை என்றால், மிளகு சாப்பிடுங்கள். ஏனெனில் மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும். மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றையும் போக்கும்.

உடல் எடையைக் குறைக்க நினைத்தால், மிளகை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். ஏனெனில் மிளகு உடலில் சேரும் கொழுப்புக்களை உடைக்கும்.

அதிலும் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொண்டு வரும் போது, இதனை சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும். அதுமட்டுமின்றி, மிளகு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தொப்பையைக் கரைக்கவும் உதவும்.

No comments:

Post a Comment