Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 3, 2024

கெட்ட கொழுப்பை விரட்டி அடிக்க உதவும் அத்திப்பழம்


நம் அன்றாட வாழ்வில் பல வித நோய்கள் நம்மை பற்றிக்கொள்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வாழ்க்கை முறை நோய்களாக இருக்கின்றன.

அதில் உயர் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். சமீக காலங்களில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமச்சீரான உணவு, சில வீட்டு வைத்தியங்கள் போன்றவற்றின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம். கெட்ட கொழுப்பான எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஒரு எளிய மற்றும் இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உலர் பழங்கள்

பாதாம், திராட்சை போன்ற உலர் பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் உதவுகின்றன. இவை உடலுக்கு தேவைடான ஊட்டச்சத்துகளை அளித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. இவற்றை போல, அத்திப்பழமும் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு உலர் பழமாகும். இதை பற்றி அதிகம் பேசப்படாவிட்டாலும், இது ஆரோக்கியத்தின் ஒரு பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றது.

ஆயுர்வேதத்தின் படி, அத்திப்பழம் ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை நீக்குகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றுடன் தாமிரம், கந்தகம் மற்றும் குளோரின் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. இது சுவையானதாக இருப்பதோடு, பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளிட்ட இந்த நோய்களை எளிதில் குறைக்கலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் அத்திப்பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்க உதவும். அத்திப்பழத்தில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பதில் நன்மை பயக்கின்றன. அத்திப்பழம் மட்டுமல்லாமல், அத்தி இலை சாறு கொலஸ்ட்ரால் சுரப்பைக் குறைக்கும் என்று இவற்றில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. உலர்ந்த அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும், இன்னும் பல வழிகளிலும் உதவும்.

அத்திப்பழம்: இந்த நோய்களிலிருந்து நம்மை காக்கும்

வலுவான எலும்புகள்:

அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்தி மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்கிறது.

மலச்சிக்கல்:

அத்திப்பழம் மலச்சிக்கலிலிருந்துவிடுபட உதவுகிறது. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால், அத்திப்பழத்தை உட்கொள்வது நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்துகள் இயற்கை மருத்துவம் போல் செயல்படும். இது செரிமானத்தையும் சீராக்கும்.

இரத்தக் குறைபாடு நீங்கும்:

அத்திப்பழங்களை உட்கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இதனால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, இரத்தக் குறைபாடும் நீங்கும். இரத்தசோகை உள்ளவர்களும் இதை உட்கொள்ளலாம்.

அத்திப்பழத்தை எப்படி சாப்பிட்டால் நல்லது?

- உலர்ந்த அத்திப்பழங்களை குறைந்தபட்சம் 12 முதல் 24 மணி நேரம் ஊறவைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
- முதலில் 2 முதல் 3 அத்திப்பழங்களை துண்டுகளாக நறுக்கி, தினமும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து பாதியாக குறைத்து குடிக்கவும்.
- குடித்த பிறகு, மீதமுள்ள அத்திப்பழத்தை மென்று சாப்பிடலாம்.
- ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று அத்திப்பழங்களை உட்கொள்ளலாம்.
- எனினும், இவற்றை சாப்பிடத் தொடங்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெறுவது நல்லது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News