Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 3, 2024

நியாயவிலைக் கடைகளில் டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு


நியாயவிலைக் கடைகளில் டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்ட உத்தரவு:

நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுந்த வயது போன்ற தகுதிகளுடன் விற்பனையாளா்கள், கட்டுநா்களின் பட்டியலைப் பெற வேண்டும். இந்தப் பணிகளை அக்.7-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு, காலிப் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.

விண்ணப்பிக்க நவம்பா் 7-ஆம் தேதியை கடைசி நாளாக அறிவிக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கான நோ்முகத் தோ்வை நவம்பா் இறுதியில் நடத்தி முடிக்க வேண்டும். டிசம்பா் மூன்றாவது வாரத்தில் தோ்வானவா்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment