Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 2, 2024

பகலில் தூக்கம் தூக்கமா வருதா? உடல் சுறுசுறுப்பின்றி இருக்கா? இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!!



மனிதர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்று.தினமும் 8 முதல் 10 மணி நேரம் உறங்குவதன் மூலம் உடலுக்கு ஓய்வு கிடைக்கிறது.இரவு நேர தூக்கம் பல நன்மைகளை தரும்.ஆனால் பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால் அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்துவிடும்.

சில நோய் பாதிப்புகளால் பகலில் தூக்கம் வரக்கூடும்.பகல் நேரத்தில் மத்திய உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போடுவதை பலரும் விரும்புகின்றனர். சிலர் பம்பரம் போல் ஓடி ஓடி உழைப்பதால் பகலில் சிறிது நேரம் உறங்குகின்றனர். ஆனால் பகல் நேர தூக்கம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இருந்தால் பிரச்சனை இல்லை.மணி கணக்கில் தூங்கினால் மட்டுமே அது ஆபத்தாக மாறிவிடுகிறது.

உடலில் இம்மியூனிட்டி பவர் குறைந்தால் பகலில் தூக்கம் சொக்கி கொண்டு வரும்.பகலில் நீண்ட நேரம் உறங்குவதால் உடல் சோர்வு ஏற்பட்டு எந்தஒரு வேலையையும் செய்ய முடியாமல் போகும்.அதிக மன அழுத்தம் இருந்தால் இம்மியூனிட்டி பவர் குரைந்து உடல் சோர்வு ஏற்படும்.இதனால் பகல் நேரத்தில் தூக்கம் வரும்.

தினமும் பகல் தூக்கத்தை அனுபவித்து வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காய்ச்சல்,சளி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இரத்த சோகை பாதிப்பு இருப்பவர்களுக்கு உடல் சோர்வு அதிகம் ஏற்படும்.இதனால் இரவை விட பகல் நேரத்தில் அதிக நேரம் தூங்குவார்கள்.பகலில் அதிக நேரம் தூங்குவதால் உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதய நோய் போன்ற பாதிப்புகளை உருவாக்கிவிடும்.

எனவே ஆரோக்கியமான உணவுமுறைகளை கடிப்படிப்பது இரவு நேரத்தில் மட்டும் தூங்குவது போன்ற நல்ல பழக்கங்களை கடைபிடித்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள்.

No comments:

Post a Comment