Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 6, 2024

பிஎட் சேர்க்கை: மாணவர் விவரத்தை பதிவு செய்ய நவ.11 கடைசி நாள்



கல்வியியல் கல்லூரிகள் பிஎட் மாணவர் சேர்க்கை விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்ய நவம்பர் 11-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டின் (2024-2025) பிஎட் பொது மற்றும் பிஎட் (சிறப்பு கல்வி) மாணவர் சேர்க்கை விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்வதற்கும், கல்வித்தகுதி கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவதற்குமான கடைசி தேதி நவம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் காலநீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பு நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment