Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 13, 2024

அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினத்தன்று (14.11.2024) காலையில் நடக்கும் கூட்டத்தில் குழந்தைக்களுக்கு இக்கடிதத்தை வாசித்துக்காட்ட வேண்டும் - மாவட்ட ஆட்சியர்


குழந்தைகள் தின விழா வாழ்த்து மடல் – 2024

அன்புத் தம்பி/தங்கையே!

நான் உங்கள் மாவட்ட ஆட்சியர் பேசுகிறேன், நம் மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தை செல்வங்களாகிய உங்களுடன் நேரில் பேசிட ஆவல் ஆனால் அதற்கான அவகாசம் இல்லாத காரணத்தால் இக்கடிதம் மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சிடைகிறேன். இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வாழும் உரிமை, வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பு உரிமை, மற்றும் பங்கேற்க்கும் உரிமை உள்ளன,

நம் (மாவட்டத்தின் பெயர்) மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் போன்ற செயல்களை தடுக்கும் வகையில் உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்க உள்ளேன். குறிப்பாக உன்னை எப்படி உன்னாலே பாதுகாக்க முடியும் என்பது அது. யாராவது உன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக செயல்பட முயற்சித்தால் தொடவிடாதே! எதிர்த்து நில்! சத்தமாக கூச்சலிடு! நிறுத்து எனக்கு பிடிக்கவில்லை! உன்னைப்பற்றி சொல்லிவிடுவேன் என்று தைரியமாக சொல்!! உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடு!!. அப்படி யாரேனும் உன்னிடம் தவறாக நடந்தால் உனக்கு நம்பிக்கைக்குரிய பெற்றோரிடமோ, ஆசிரியிரிடமோ, அல்லது நண்பர்களிடமோ சொல்லி உதவி கேள்! அல்லது உங்களுக்கென்று உதவி செய்ய உருவாக்கப்பட்ட நம் சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற இலவச அவசர தொலைபேசி எண் மூலம் அந்த தகவலை கூறி உதவி கேள், உங்களின் விவரம் ரகசியமாக பாதுகாப்பத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும். குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், அதுமட்டுமல்லாமல் அக்குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்பட்டால் விடுதி வசதியும் ஏற்படுத்தி தரப்படும்.

குழந்தைகளாகிய நீங்கள் நம் (மாவட்டத்தின் பெயர்) மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்வது மிக அவசியமான ஒன்றாகும் அதன்படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படுவது, நடத்த ஏற்பாடு செய்வது, வற்புறுத்துவது போன்ற செயல்கள் இந்திய குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006 படி தண்டனைக்குரிய செயலாகும் எனவே உங்களை பாதுகாத்துக்கொள்ள இதுப்பற்றிய தகவல் உங்களுக்கு தெரிந்தாலோ இந்த கொடுஞ்செயல் உங்களுக்கு நடக்க இருந்தாலோ குழந்தைகளுக்கான 24 மணி நேர இலவச அவசர தொலைபேசியான சைல்டு லைன் 1098 க்கு தகவல் தெரிவித்து உதவிக் கேட்கலாம்.

தற்போதைய சூழலில் போதைக்கு அடிமையாகும் நபர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் நீங்கள் எப்பொழுதும் எந்த விதமான போதைக்கும் அடிமையாக கூடாது. போதை "எனக்கு வேண்டாம் நமக்கும் வேண்டாம்" என்ற உறுதியோடு செயல்பட வேண்டும். உங்கள் உடலை உறுதியாக ஆரோக்கியமான வைத்துக்கொள்ள உடல்பயிற்சி செய்யுங்கள்.

இந்த உலகம் அனைவருக்குமானது எனவே உங்கள் வகுப்பை சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவமிக்க வகுப்பறையாக மேம்படுத்தவேண்டும்.

நம் (மாவட்டத்தின் பெயர்) மாவட்டதில் உங்களுக்காக ஓடோடி வந்து உதவி செய்ய நானும் மற்ற குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அதிகாரிகளும் தயாராகக் இருக்கிறோம் இந்த தகவலை நீங்கள் தவறாமல் உங்களின் நண்பர்களுக்கும் தெரிவிப்பாய் என்று நம்பிகின்றேன். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு நம் மாவட்டத்தை குழுந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலமிக்க மாவட்டமாக உருவாக்கிடுவோம்.


இப்படிக்கு தங்கள் அன்புள்ள

மாவட்ட ஆட்சியர்

குறிப்பு : இந்த கடிதத்தை அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினத்தன்று (14.11.2024) காலையில் நடக்கும் கூட்டத்தில் குழந்தைக்களுக்கு வாசித்துக்காட்ட வேண்டும்


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News