நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்பட்டு வருகின்றன.
மேலும், குறைந்த முதலீட்டில் சொந்த தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசானது "கருணாநிதி கடன் உதவி" என்ற திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு, தொழில் தொடங்குவதற்கும், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும் கடன் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்களின் நிதி சுமையை குறைக்கும் வகையில், ரூ.20 லட்சம் வரை தமிழ்நாடு அரசு கடன் வழங்குகிறது. இந்த திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பதை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
* இந்த திட்டத்தில் 18-65 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். இது 7% வட்டியில் ரூ. 20 லட்சம் கடன் உதவி வழங்குகிறது.
* தொழில் முனைவோர்கள் 600 புள்ளிகள் சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும்.
* கடன் பெறும் நிறுவனங்கள், கடன் பெறும் ஆண்டில் இருந்து முந்தைய 2 ஆண்டுகளில் நல்ல வருமானத்தை பெற்றிருக்க வேண்டும்.
* தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் "தாய்கோ" வங்கியின் அனைத்து கிளைகளிலும் இந்த கருணாநிதி கடன் உதவி தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
* இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் மட்டுமே ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment