நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஏற்படும் நிலை உள்ளது. இதனால், மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுவிடாமல், முந்தைய நாள் இரவே பள்ளி விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், பள்ளி விடுமுறையை மாவட்ட ஆட்சியர்கள் நிலைமையை பொருத்து முடிவு செய்வார்கள். அதற்கும் கூடுதலாக, அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கும், சூழ்நிலைக்கு ஏற்ப, விடுமுறை அறிவிக்க அதிகாரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment