மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இயந்திரா நிறுவனத்தில் 3,883 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மற்றும் சென்னை ஆவடியில் உள்ள கிளைகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இயந்திரா நிறுவனம் (Yantra India) ராணுவத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்கிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்த நிறுவனம் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இயந்திரா நிறுவனத்தில் காலியாக உள்ள 3,883 பயிற்சி பணியிடங்களை ( Apprentices Posts) நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை பார்க்கலாம்
பணியிடங்கள் விவரம்: ஐடிஐ முடித்தவர்களுக்கு 1,385 பணியிடங்களும், ஐடிஐ அல்லாத பணியிடங்கள் 2,498 ம் உள்ளன. திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஆவடியில் உள்ள ராணுவ தொற்சாலையிலும் பணியிடங்கள் உள்ளன. ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெக்கானிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. திருச்சியில் உள்ள தொழிற்சாலையில் 75 பணியிடங்களும், ஆவடி ராணுவ தொழிற்சாலையில் 45 பணியிடங்களும் நிரப்ப படுகின்றன.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ப துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். ஐடிஐ அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் குறைந்தது 40 சதவீத மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு & சம்பளம்: இந்த பணியிடங்களுக்கு 35 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். ஊதியத்தை பொறுத்தவரை இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். ஐடிஐ கேட்டகிரி பணிக்கு மாதம் ரூ.6000, நான் ஐடிஐ கேட்டகிரி பணிக்கு மாதம் ரூ. 7000 வழங்கப்படும்.
தேர்வு முறை: மெரிட் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து அறிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கவும். எஸ்.சி/ எஸ்.டி/ பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வு கட்டணம் ரூ.100 ஆகும். இதர விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 22.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2024
தேர்வு அறிவிப்பினை படிக்க
No comments:
Post a Comment