Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 8, 2024

ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறுமா? முதல்வர் தலைமையில் இன்று பள்ளிக்கல்வித்துறை ஆய்வு கூட்டம்

இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களின் சாதனைகளையும், அரசின் திட்டங்களின் செயல்பாட்டையும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆய்வு செய்கிறார். இதனால் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு இரண்டாம் கட்ட போட்டி தேர்வு இல்லாமல் பணி நியமனம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைவது உள்ளிட்ட சில திட்டங்களை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாமலேயே உள்ளது.

கோரிக்கைகள்: திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை கூட, இதுவரை நிறைவேற்றாத நிலையில், இதுகுறித்து பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு விடுக்கப்பட்டும் வருகின்றன.

அதுமட்டுமல்ல, அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டும், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்காமலும் உள்ளது. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஒட்டுமொத்த பணிகளும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியர் நியமனம்: எனவே, ஆசிரியர் நியமனத்தில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வேண்டும் என்பதே ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..

இந்நிலையில்தான், கடந்த 4ம் தேதி, அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனை கூட்டத்தை நடத்தியிருந்தார்.. அப்போது நவம்பர் 8ந் தேதி பள்ளி கல்வித் துறையின் ஆய்வுக்கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.

அந்தவகையில், இன்று முதல்வர் துறைவாரியான ஆய்வினை நடத்த போகிறார்.. பள்ளிக்கல்வித்துறையில் மேலும் வசதிகளை ஏற்படுத்துவது, பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ள நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளும் இன்று நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு: சில தினங்களுக்கு முன்பு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் சில கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த 13 வருடங்களாக தற்காலிக நிலையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் 12 ஆயிரம் பேருக்கும், காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் என பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இதை இந்த ஆய்வு கூட்டத்திலேயே முதல்வர் செய்ய வேண்டும்'' என்றும் கேட்டுக் கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News