Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 7, 2024

பள்ளிகளுக்குச் செல்லாமல் நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் சென்றுள்ளதை ஆதரித்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து


பள்ளிகளுக்குச் செல்லாமல் நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் சென்றுள்ளதை ஆதரித்த பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அந்த வகையில், ராஜஸ்தான், தில்லியில் 21 பள்ளிகளின் அங்கீகாரத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி ராஜஸ்தான், தில்லியில் 27 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மாணாக்கரின் வருகைப் பதிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பெரும்பாலானோர் வகுப்புகளுக்கு செல்லாமல் நீட் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு சென்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கை இன்று(நவ.6) எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேல்நிலைப் பள்ளிகளாக இருந்த 6 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் தாழ்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து விளக்கம் கேட்டு மேற்கண்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு மாதத்துக்குள் விளக்கமளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment