Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 17, 2024

சித்த மருத்துவத்தில் காய்ச்சலைப் போக்கும் மருந்துகள் - மருத்துவர் விளக்கம்!

தீபாவளி முடிந்து மழையும், பனியுமான ஒரு குளிர் காலம் நிலவத்துவங்கிவிட்டது. இப்போது தொற்று கிருமிகளுக்கு கொண்டாட்டமான காலம் எனலாம்.

எளிதாக தொற்றும் வாய்ப்பு காற்றில் உள்ளது. நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலமிது என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் மக்களை எச்சரிக்கிறார். மழைக்காலத்தில் பரவும் காய்ச்சல்கள் மற்றும் அதை தீர்க்கும் சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து மருத்துவர் ஒரு தொடராக இங்கு விளக்குகிறார். மழைநீர் தேங்கி நிற்பதால் அதில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுகிறது. சுத்தமில்லாத தண்ணீரின் வழியே, டைஃபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, உணவு ஒவ்வாமையால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்றவை ஏற்பட வழிவகுக்கும்.

குறிப்பாக குழந்தைகள், உடல் பலவீனமான நிலையில் இருப்பவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு மருந்தை உட்கொண்டு வாழ்பவர்கள் என அனைவரும் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்

காய்ச்சல்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளதா? உடனே சரியாகுமா?

சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து உள்ளதா? குணப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து உள்ளது. காய்ச்சல் முதல் 4,448 நோய்களுக்கும், சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் உள்ளன.

சித்த மருந்துகள் தாமதமாகத்தான் வேலை செய்யும் என எண்ணாதீர்கள். உடனடி தீர்வு தரும் சித்த மருந்துகளும் உள்ளன. சித்த மருத்துவ நூல்களில் 64 வகையான காய்ச்சல் இருப்பது விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் ஏற்படும் பல்வேறு வகை காய்ச்சல்களை இந்த தொடரில் கடந்த நாட்களில் பார்த்து வந்தோம். அதற்கு உள்ள சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சித்த மருத்துவம்

வயிறு, குடல், மலச்சிக்கல் போன்றவையே காய்ச்சல் வரக்காரணமாகும். வாதம், பித்தம், கபம் சரி செய்து சித்த மருந்துகளை வழங்கவேண்டும். முதலில் வயிற்றில் உள்ள அழுக்கை வெளியேற்ற மலமிளக்கி மருந்தை வழங்கி, வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றி பின்னர் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கவேண்டும்.

மலமிளக்கி மருந்து

திரிபலா சூரணம் காலை 5 கிராம்

மாலை 5 கிராம் வெந்நீரில் கலந்து கொடுக்க வேண்டும். அல்லது நிலவாகை சூரணம் மேற்கண்ட அளவுப்படி அல்லது பொன்னாவிரை மாத்திரை மருத்துவர் ஆலோசனைப்படி வழங்கவேண்டும்.

பின்னர்,

குடிநீர் வகைகள்

நிலவேம்பு குடிநீர்

கபசுர குடிநீர்,

வாதசுர குடிநீர்

ஆடாதொடை குடிநீர்

நொச்சி குடிநீர்

ஆகியன சித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்த வேண்டும்.

மாத்திரைகள்

பிரம்மானந்த பைரவ மாத்திரை

கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை,

சாந்த சந்திரோதயம் மாத்திரை,

வசந்த குசுமாசுர மாத்திரை

பால சஞ்சீவி மாத்திரை

மஹா சுதர்சன மாத்திரை

நிலவேம்பு குடிநீர் சூரணம் மாத்திரை

கோரோசனை மாத்திரை போன்ற மாத்திரைகளை சித்த மருத்துவரின் பரிந்துரையின்பேரில் வாங்கி பயன்படுத்தவேண்டும்.

சூரணம்

திரிகடுகு சூரணம்

தாளிசாதி சூரணம்

மஹா சுதர்சன சூரணம்

பற்பம்

பவள பற்பம்,

முத்து பற்பம்,

முத்து சிப்பி பற்பம்

சிருங்கி பற்பம்

வெள்ளி பற்பம் ஆகியன

செந்தூரம்

லிங்க செந்தூரம்

பூரண சந்திரோதயம்

கருப்பு வகைகள்-

சிவனார் அமிர்தம்,

கௌரி சிந்தாமணி,

கஸ்தூரி கருப்பு

இருமலுக்கு - ஆடாதோடை மணப்பாகு

தாளிசாதி வடகம் மாத்திரை

அதிமதுரம் மாத்திரை வாங்கி ஒன்று அல்லது இரண்டு மாத்திரை வாயில் போட்டு சவித்து சாப்பிடலாம். இந்த மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கி நாள் அளவு, மருந்தின் அளவு தெரிந்து பயன்படுத்த வேண்டும். சுயமாக எவ்வித சித்த மருந்துகளையும் பயன்படுத்தவேண்டாம் என்று சித்த மருத்துவர் காமராஜ் அறிவுறுத்துகிறார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News