Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 21, 2024

பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு

பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை வெளியீடு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கோடை கால தொடர் வகுப்பின் (Summer Sequential Programme - SSP) வாயிலாக பெற்ற M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - இணைப்பு: DSE செயல்முறைகள், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் கடிதம் மற்றும் அரசாணை!

பல்வேறு இணைத்தன்மை பல்கலைக்கழகங்கள்/கல்வி நிறுவனங்களின் பட்டப்படிப்புகளுக்கு வழங்குவது சார்ந்து 13.09.2024 அன்று நடைபெற்ற 27வது இணைத்தன்மை குழு கூட்டத் தீர்மானத்தின்படி. உயர்கல்வித் துறையால் வெளியிடப்பட்ட பார்வை (2)ல் காணும் அரசாணையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்படாத கோடைக்கால தொடர் வகுப்புகளின் (Summer Sequential Programme - SSP) வாயிலாக M.Phil உயர்கல்வித் தகுதி பெற்றமை முழு நேர M.Phil. உயர்கல்வித் தகுதிக்கு இணையானதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் பார்வை (3)ல் காணும் கடிதத்தின் வாயிலாக பெறப்பட்டுள்ளது. எனவே, பார்வையில் காணும் அரசாணை மற்றும் கடித நகல் தகவலுக்காகவும். உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த நடவடிக்கைக்காகவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News