+2 வேதியியல் பாடத்தில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்:
2 மதிப்பெண் வினாக்கள்
1. தாங்கல் கரைசல் என்றால் என்ன?
2. உயர்த்தி, வினைவேகமாற்றியின் நச்சு என்றால் என்ன?
3. கிளிசராலின் நீர் நீக்க வினையைத் தருக.
4. பேயரின் காரணியைப் பயன்படுத்தி எத்திலீன் கிளைக்கால் எவ்வாறு பெறுவாய்?
5. டைஎத்தில் ஈதர் தயாரிக்கும் ஏதேனும் ஒரு முறையை எழுதுக.
6. ஃபார்மலின் என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?
7. கார்பாக்ஸிலிக் அமிலத்தை கண்டறியும் ஆய்வை எழுதுக?
8. மக்கும் பலபடிகள் என்றால் என்ன? எ.கா தருக.
9. இருமின்முனை அயனி வரையறு.
10. வல்கனைசேசன் என்றால் என்ன?
11. உணவு பாதனபொருட்கள் என்றால் என்ன?
3 மதிப்பெண் வினாக்கள்
1. மின்னாற் பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.
2. மின்பகுளி கடத்து திறனை பாதிக்கும் காரணிகள் யாவை?
3. மோலார் கடத்துதிறன் மற்றும் சமான கடத்துதிறன் வைரையறு.
4. வினைவேக மாற்றியின் சிறப்பியல்புகள் யாவை?
5. மின்னாற் சவ்வூடு பரவல் பற்றி குறிப்பு வரைக.
6. ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றம் பற்றி விவரிக்கவும்.
7. டைஎத்தில் ஈதர் மற்றும் கிளிசராலின் பயன்களை எழுதுக.
8. ரோசன்மண்ட் ஒடுக்க வினையைத் தருக.
9. யூரோட்ரோபின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயன்கள் யாவை?
10. குளோரோ பென்சீனில் இருந்துபீனாலை எவ்வாறு பெறுவாய்?
11. a-D(+) குளுக்கோபைரனோஸின் அமைப்பை எழுதுக.
12. புரதங்களின் இயல்பிழத்தல் பற்றி குறிப்பு வரைக.
13. அசிட்டோனை பினகாலாக எவ்வாறு மாற்றுவாய்?
14. போதை தரும். போதை தராத மருந்து பொருட்கள் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.
15. கார்பைல் அமீன் வினை பற்றி குறிப்பு எழுதுக?
16. ஹார்மோன்கள் என்றால் என்ன? எ.கா. தருக.



No comments:
Post a Comment