முக்கிய செய்திகள்

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, December 18, 2024

இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வேளாண் பல்கலை அழைப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ன்ஸ்டன்ட் மிக்ஸ் உணவுப் பொருட் கள் தயாரிக்கும் முறை குறித்து சென்னைகிண்டியில்வரும் 18-ம்தேதி நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்டசெய்திக்குறிப்பு:

சென்னை கிண்டியில் செயல் பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் டிச.18-ம் தேதி இன்ஸ்டன்ட் மிக்ஸ் உணவு பொருட்களை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், ரவா இட்லி மிக்ஸ், வெங்காய ரவா தோசை மிக்ஸ், சேமியா பாயசம் மிக்ஸ், பஜ்ஜி மிக்ஸ், அரிசி உப்புமா மிக்ஸ், அடை மிக்ஸ், மசாலா வடை மிக்ஸ், புளியோதரை மிக்ஸ் ஆகியவற்றை தயாரிப்பது தொடர்பாக செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.

இதேபோல, டிச.19-ம் தேதி, பிரவுனிகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், முட்டை மற்றும் முட்டை இல்லாத கிளாசிக் பிரவுனிகள், மெல்லும் பிரவுனிகள், வால்நட், வேர்க்கடலை, பட்டர் ஸ்காட்ச், கேரமெல், சாக்லேட், நியூடெல்லா, ராஸ்பெர்ரி வகை பிரவுனிகள், தேங்காய் பிரவுனிகள் போன்றவற்றை தயாரிக்க கற்று கொடுக்கப்படும்.

மகளிர், மாணவர்கள், சுயஉதவிக் குழுவினர், இளைஞர்கள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பை பயன்படுத் திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்பு களில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News