Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 23, 2025

வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 60,000 கணினி பட்டதாரிகள்


தமிழகத்தில் கணினி அறிவியல் படிப்புடன் பி.எட்., படித்த, 60,000 பட்டதாரிகள் அரசு பணி வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர். தகுதி இருந்தும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும் கணினி பயிற்றுனர் பணியிடங்களிலும், இவர்களுக்கான நியமனங்கள் மறுக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது.

மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புடன் பி.எட்., பட்டம் பெற்று, 60,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பிற பாடங்களுக்கு உள்ளது போல, கணினி ஆசிரியர் நியமனத்திற்கு பி.எட்., கட்டாயம் இல்லை என்ற நிலை உள்ளதால், பி.எட்., தகுதியால் பயனில்லை. இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்திலும், பி.எட்., பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்.

இதுபோல் பிற பாடங்களுடன் பி.எட்., தகுதி பெற்றவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,), மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தகுதி உள்ளது. ஆனால், கணினி அறிவியலுடன் பி.எட்., படித்தவர்களுக்கு இவ்வகை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதியில்லை. அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர், ஆய்வக கணினி பயிற்றுனர், எமிஸ் பணிக்கான பணியிடங்களில் மட்டுமே நியமிக்க தகுதி உள்ளது.

No comments:

Post a Comment