Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 18, 2025

8 ஆவது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்வதற்கான (உயர்த்துவதற்கான) 8-வது ஊதியக்குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகளை திருத்தியமைக்க 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 8-வது சம்பளக் குழுவை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.” என்று தெரிவித்தார்.

மத்திய அரசு, தனது ஊழியர்களின் சம்பள அமைப்பை திருத்தியமைக்க ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஆணையத்தை அமைக்கிறது. சம்பள அமைப்பை திருத்துவதோடு மட்டுமல்லாமல், அவை ஓய்வூதிய கொடுப்பனவுகளையும் தீர்மானிக்கின்றன.

7-வது சம்பள ஆணையம் 2016 இல் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் 2026 இல் முடிவடையும் நிலையில், புதிய ஊதிய ஆணையம் அமைப்பதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

7வது ஊதியக் குழுவில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன?: 7வது ஊதியக் குழுவிற்கான சம்பள திருத்தம் வரும்போது ஊழியர் சங்கங்கள் 3.68 ஃபிட்மென்ட் காரணியைக் கோரின. ஆனால் அரசாங்கம் 2.57 ஃபிட்மென்ட் காரணியை முடிவு செய்தது. ஃபிட்மென்ட் காரணி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முறை ஆகும்.

இதன் விளைவாக குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 6வது ஊதியக் குழுவில் ரூ.7,000 ஆக இருந்தது, இது மாதத்திற்கு ரூ.18,000 ஆக மாறியது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.3,500 லிருந்து ர9,000 ஆக உயர்ந்தது. அதிகபட்ச சம்பளம் ரூ. 2,50,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகவும் மாறியது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News