Join THAMIZHKADAL WhatsApp Groups
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இது 2 பிரிவாக நடைபெறும். இதில், முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்துகிறது.
அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல் கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு நவம்பர் 22-ம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், எந்தெந்த நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது என்ற விவரத்தை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment