![]() |
| உலக நீதி நாள் |
தன்னை அறிந்தவன் தானே தலைவன்.
He who knows himself may know his maker.
இரண்டொழுக்க பண்புகள் :
* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.
* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி :
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
--கவிஞர் கண்ணதாசன்
பொது அறிவு :
1. விழாக்காலங்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயு எது?
விடை : ஹீலியம்.
2. இந்தியாவின் தேசிய நீர் வாழ் விலங்கு எது?
விடை : கங்கை டால்பின்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..
இதனை உணர்ந்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்…
பிப்ரவரி 20
நீதிக்கதை
தென்றலும் சூறாவளியும்
ஆற்றங்கரையிலே நின்ற அந்த மாமரம் சலசலவென்று சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தது. அதன் கிளைகளிலே தங்க நிற மாம்பழங்கள் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஓர் அணிற் பிள்ளையும் ஒரு கிளிப்பிள்ளையும் அந்த மாமரத்தை நெருங்கின.
“அம்மா, மாமரத் தாயே ! பசித்து வந்திருக்கிறோம்” என்றது கிளிப்பிள்ளை. “உங்களுக்காகத்தானே பழம் வைத்திருக்கிறேன். நன்றாகச் சாப்பிடுங்கள்”? என்று கூறியது மாமரம்.
“மாவம்மா,இன்று, ஒரே ஆனந்தமாயிருப்பது போல் தெரிகிறதே! என்ன காரணம்?” என்று விசாரித்தது அணிற்பிள்ளை.
“பிள்ளைகளே ! தென்றல்மாமா வந்திருக்கிறார். அவர் வந்திருப்பதே ஓர் இன்பம்தானே!” என்று கூறியது மாமரம்.
அணிற்பிள்ளையும் கிளிப்பிள்ளையும் வயிறு நிறைய பழம் சாப்பிட்டுவிட்.டுச் சென்றுவிட்டன. தென்றல் மாமாவுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தது மாமரம்.
இரண்டு நாட்கழித்து,
“மாவம்மா! நேற்றெல்லாம் *ஓ*வென்று அலறிக் கொண்டிருந்தாயே ஏன்?” என்று கேட்டுக் கொண்டே மாமரத்திடம் வந்தது அணிற்பிள்ளை.
மாமரத்தைப் பார்த்து “இதென்ன அநியாயம்! மாமரத் தாயே! உன்கிளைகளெல்லாம் ஏன் முறிந்து கிடக்கின்றன. ஐயோ ! பழமெல்லாம் கீழே வீழுந்து அழுகிக் கிடக்கின்றனவே, ஏன்?' என்று பதறிப் போய்க் கேட்டது கிளிப்பிள்ளை.
பிள்ளைகளே, நேற்று சூறாவளி என்கிற முரடன் வந்தான். அவன் செய்த அட்டூழியம்தான் இது!” என்று கூறிக் கண்ணீர் விட்டது மாமரம். மாமரத்தின் துன்பத்தைக் காணப் பொறுக்காமல் கிளிப்பிள்ளையும்
அணிற்பிள்ளையும் கண்ணீர் விட்டன.
அவற்றிற்குப் பழம் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று மாமரம் வருந்தியது. பின்னர்
அவையிரண்டும் தத்தம் இருப்பிடம் நோக்கிச் சென்றன.
கருத்துரை:-- நல்லவர்கள் வரவால் இன்பம் உண்டாகும். தீயோர்கள் வரவால் துன்பமே உண்டாகும்.
இன்றைய செய்திகள்




No comments:
Post a Comment