Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 2, 2025

5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்கள்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு


2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 10,000 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உயர் கல்வித்துறைக்கு ரூ.50,067 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.78,572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்​வித்​துறை​யில் பல சீர்​திருத்​தங்கள் செய்​யப்​பட்​டுள்ளன. கல்வி​யில் செயற்கை நுண்​ணறிவை பயன்​படுத்து​வதற்காக புதிய சீர்​மிகு மையம் ரூ.500 கோடி​யில் அமைக்​கப்​பட​வுள்​ளது. ஐஐடிக்​களில் கட்டமைப்புகள் மேம்​படுத்​தப்​பட​வுள்ளன. 2014-ம் ஆண்டுக்​குப்​பின் 5 ஐஐடிக்களில் கட்டமைப்புகள் மேம்​படுத்​தப்​பட்​ட​தால், கூடு​தலாக 6,500 மாணவர்கள் படிக்​கும் வசதி ஏற்பட்​டுள்​ளது. ஐஐடி பாட்​னா​வில் தங்கும் விடுதி வசதி உட்பட அனைத்து கட்டமைப்பு வசதி​களும் மேம்​படுத்​தப்​பட்​டுள்ளன. கடந்த 10 ஆண்டு​களில் நாடு முழு​வதும் உள்ள 23 ஐஐடிக்​களில் கட்டமைப்பு வசதிகள் மேம்​படுத்​தப்​பட்ட மாணவர்​களின் எண்ணிக்கை 65,000-லிருந்து ரூ.1.35 லட்சமாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஐஐடிக்​களுக்கு மட்டும் ரூ.11,349 கோடி பட்ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்​களில் பிராண்ட் பேண்ட் இணைப்பு வழங்​கப்​பட​வுள்​ளது. அரசு பள்ளி​களில் அடுத்த 5 ஆண்டு​களில் 50,000 அடல் டிங்​கரிங் கூடங்கள் உருவாக்​கப்​படும். திறன்​மேம்​பாட்டுக்கு 5 தேசிய திறன் மையங்கள் அமைக்​கப்​படும். பள்ளிகள் மற்றும் உயர்​கல்​வி​யில் இந்திய மொழி புத்​தகங்களை வழங்க பாரதிய பாஷா புஷ்தக் திட்​டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது.

No comments:

Post a Comment